யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபரை இடமாற்ற வேண்டாம் என கோரி நாவாந்துறை பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றம் தொடர்பிலான கடிதம் ஓஸ்மானியா கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த இடமாற்றத்தை நிறுத்த கோரிக்கையே இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். நாவாந்துறை ஜந்து சந்தி பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“மாணவர்களின் எதிர்காலத்திற்காக தன்னை அர்ப்பணித்த முபாறக் அதிபரை மாற்ற நினைப்பது ஏன்?”, “மௌலவி சுபியான் அவர்களே பழிவாங்காதீர்கள்”, “கல்வி வளர்ச்சிக்கு உதவுபவரை அவமானப்படுத்தாதீர்கள்”, “அன்று பாடுபட்டவரை இன்று மறக்காது எம் சமூகம்…” உள்ளிட்ட பல கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.