கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மயானத்தை அமைக்க 24 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாயை கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார்.

அதேபோல புலம் பெயர் அமைப்பு ஒன்றும் ஒரு கோடி ரூபாயை வழங்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில், மின் தகன மயானம் அமைக்கும் நடவடிக்கை தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

Related Posts