நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படகின்றது.
குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் அவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி பொதுமக்கள் தற்பொழுது வீதிகளில் வழமைபோல நடமாடி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனையோரும் வீதிகளில் தற்பொழுது சுதந்திரமாக நடமாடுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.