உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினருக்கு தோல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையில் உள்ள தோல் மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமாறு தோல் மருத்துவ வல்லுநர் நிறுவனம் பரிந்துரைக்கிறது.
கோவிட்-19 தொற்றுநோயின் போது டைனியா எனப்படும் பூஞ்சை தோல் நோய் வேகமாக பரவுவது குறித்து அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (04) ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தோல் மருத்துவர் வல்லுநர் ஜனக அகரவிதா, பூஞ்சை தோல் நோய் பல வருடங்களுக்கு முன்பே குழந்தைகளிடையே பரவியது. இது தற்போது பெரியவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த நோய் தோலின் மேற்பரப்பில் அரிப்பு ஏற்படுவதால் தொடைகள், அக்குள் மற்றும் உடலின் வியர்வை இருக்கும் பகுதிகளில் பரவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது நோயின் வகை மாறிவிட்டது” என்று ரிட்ஜ்வே சிறுவர் தோல் மருத்துவர் வல்லுநர் ஸ்ரீயானி சமரவீர கூறினார்.
தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சருமத்தை உலர வைப்பதன் மூலமும், சரியான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலமும் இதைத் தடுக்க முடியும் என்று சிறப்பு தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.