யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சண்டிலிப்பாய்,மாசியப்பிட்டியைச் சேர்ந்த (67 வயது) பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.

Related Posts