யாழ். உள்ளிட்ட நாட்டின் பல இடங்களுக்கும் பரவிய டெல்டா!

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பிலியந்தலையைச் 22 வயதான ஆணொருவரும் இவர்களில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 38 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபு இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக ஹேமந்த ஹேரத் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts