தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 41 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அவர், 2019 ஆம் ஆண்டு கட்டாருக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவரை கைதுசெய்ய இன்டர்போல் நீல நோட்டீஸ் அனுப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி சந்தேக நபர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தற்சமயம் சந்தேக நபர் முல்லியவலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.