மாதாந்தம் 50000 ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மாதாந்தம் 50000 முதல் 100000 ரூபா வரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
50000 ரூபாவிற்கு குறைவாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்யப்பட மாட்டாது.பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியனவே நாட்டில் அதிக நட்டமடையும் நிறுவனங்களாகும்.மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி எற்பட வாய்ப்பு காணப்பவதாக பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.