யாழில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு 100ஐ நெருங்கியது!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.

அதேபோல், யாழ்ப்பாணம் – வெள்ளாந்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாவினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, மேலும் 101 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்றையதினம் கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இதன்படி, யாழ். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐயாயிரத்து 291 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts