டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயம் – சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை!!

நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் எனவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை சந்திக்க நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் இல்லாவிடினும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் அபாயகரமான சூழல் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

Related Posts