கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 25க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலை, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டமையினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஊழியர்கள், வழமைப்போன்று இன்று பணிக்கு சென்றிருந்தபோதே திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.