இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் வேகமாகப் பரவும் பி .1.1.7 கோவிட்-19 புதிய திரிபு வைரஸ் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாபிட்டி, வாரியபொல, மாத்தறை, ஹபரதுவா, திசாமஹராம, கராபிட்டி மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்த நபர்களிடம் பெற்றப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர், மருத்துவர் சந்திமா ஜீவந்திரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் மாதிரிகளின் கூறுகள் ஆய்வுக்காக என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
அவற்றின் முடிவுகளையே இன்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர், மருத்துவர் சந்திமா ஜீவந்திரா அறிவித்துள்ளார்.
“கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஊழியர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளில் B.1.1.7 இங்கிலாந்து கோவிட்-19 வைரஸ் திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவி வரும் பி .1.617.2 (டெல்டா) கோவிட்-19 வைரஸ் திரிபு நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என்றும் மருத்துவர் சந்திமா ஜீவந்திரா தெரிவித்துள்ளார்.