சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள்!!

யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை இராணுவத்தினரிடம் சுகாதார துறையினர் வழங்கியுள்ளனர்.

சுன்னாகம்- மயிலங்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்ல இன்று பிற்பகல், அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதன்போது அவர்கள், தங்களுக்கு தொற்று இல்லை எனவும் பரிசோதனையிலும் நம்பிக்கை இல்லை எனவும் கூறி சிகிச்சை நிலையத்துக்கு அம்புலன்ஸ் வண்டி ஊடாக செல்வதற்கு மறுத்து விட்டனர்.

மேலும் இந்த விடயத்தில் தங்களை வற்புறுத்தினால் உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று எச்சரித்தமையை தொடர்ந்து அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts