முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என அறியமுடிகிறது.
இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,முள்ளியவளை காவல்துறை பிரிவுகள் கடந்த 17.05.21 ஆம் திகதி இரவு 11.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவித்து இன்று இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலும் மக்கள் தனிமைப்படுத்தல் விதியினை சரியாக நடைமுறைப்படுத்த தவறிவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது