வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம்நகர்த்தவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் யாழின் பல பிரதேசங்களில் 8.30 மணியிலிருந்து மாலை 6 வரையான ஒன்பதரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைவாக நாளை சனிக்கிழமை துலாக்கட்டு, வதிரிப்பிரதேசம், சக்கலாவத்தைப் பிரதேசம், உடுப்பிட்டி வீதியில் பிரதேச சபை தொடக்கம் நவிண்டில் வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி, புனிதநகர், கற்கோவளம், நெல்லண்டை, ஸ்ரான்லி வீதி, யாழ்.மாநகர சபை பிரதேசம், பாசையூர், யாழ்.மாநகரசபைப்பகுதி, உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப்பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி ஆகிய இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
7ஆம் திகதி திங்கட்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மாவடி, மூளாய் பிரதேசம் ஆகிய இடங்களிலும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி, உரும்பிராய், ஊரெழு பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் 9 ஆம் திகதி புதன்கிழமை துலாக்கட்டு, வதிரிப்பிரதேசம், சக்கலாவத்தைப் பிரதேசம், உடுப்பிட்டி வீதியில் பிரதேச சபை தொடக்கம் நவிண்டில் வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை உரும்பிராய், ஊரெழு பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை; மாவடி, மூளாய் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.