தீக்காயங்களுக்குள்ளான இளைஞரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி வீதியைச் சேர்ந்த சிவனொளி காண்டீபன் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இவ்விளைஞர் அடுப்பை பற்றவைப்பதற்காக அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியதாகவும் இதன்போது பரவிய தீயில் இவ்விளைஞர் எரிவடைந்ததாகவும் அயலவரொருவர் கூறினார்.
தீக்காயங்களுக்குள்ளான இவ்விளைஞர் உடனடியாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.