இலங்கை முடக்கப்படாது – மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை!!

முழு நாட்டையும் முடக்குவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தார்.

எனினும், அடுத்துவரும் நாட்களில் மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts