நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று நிலமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75 சதவீதம் மூடுவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டனர்.
எதிர்காலத்தில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு இருக்காது என்றும் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நீண்ட விவாதங்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.