நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 745ஆக அதிகரித்துள்ளது.
இதே வேளை நாட்டில் நேற்று மட்டும் 1895 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில், 44 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 424ஆக அதிகரித்துள்ளது.