யாழில் சுகாதார நடைமுறைகளை மீறியவர்களை தூக்கிச் சென்ற பொலிஸார்!!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ். நகர பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Posts