யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.