யாழில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் 24 பேருக்கும் உடுவில் மற்றும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை யாழ். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மூவருக்கும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் மூவருக்கும் மல்லாவியில் இருவருக்கும் என மொத்தம் 05 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி பளையில் 4 பேருக்கும் வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

Related Posts