வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 431 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றைய மூவரும் மல்லாவியில் இறுதிச் சடங்கு ஒன்றுக்கு புத்தளத்திலிருந்து வருகைதந்தவர்கள் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.