சிறுமியின் கொலையைக் கண்டித்து இன்று மண்டை தீவில் பெரும் போராட்டம்

மண்டைதீவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையைக் கண்டித்து இன்று பெரும் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் இன்று காலை மண்டை தீவு பிரதேச சபையின் உப அலுவலகத்துக்கு அண்மையில் நடைபெறவுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி நான்கு வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரிகளால் சிறுமி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் சிறுமியின் உடற்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சிறுமியின் இந்தப் படுகொலையைக் கண்டித்து சமூக அமைப்பபுக்கள், அரச அமைப்புக்கள், மற்றும் வேலனைப் பிரதேச சபையினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வுள்ளதுடன் பொதுமக்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

Related Posts