2020 O/L பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விசேட வசதி!

2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக இம்முறை விசேட வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக பரீட்சை அனுமதி அட்டையில் காணப்படும் குறைபாடுகளை https://www.doenets.lk/ என்ற திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்கள் மூலமும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாமாகவே ஒரு வாரத்திற்குள் இந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts