பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொவிட் நோயாளிகளைக் கண்டறிவது தொடர்பாக சுகாதார பரிசோதக அதிகாரிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், பொதுமக்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மக்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொவிட் தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts