2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை வழமைபோன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் செயன்முறைப் பரீட்சையை இரத்து செய்யப்படும் என முன்பு எடுக்கப்பட்ட முடிவை இரத்து செய்வதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு எழுத்துமூல பரீட்சையினைத் தொடர்ந்து செயன்முறை பரீட்சை நடாத்தப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சைக்கான அனுமதி அட்டையினை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.