யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!!

கொரோனா தொற்று உறுதியாகி யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் நேற்றையதினம் (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.

தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் தகனம் செய்யப்படும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts