யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியில் ஒருவருக்கு கோரோனா; மருத்துவர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதி 3இல் சிகிச்சை பெற்றவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த விடுதியின் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த நோயாளி ஒருவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அத்துடன், 9ஆவது நோயாளர் விடுதியிலும் நோயாளி ஒருவரிடம் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவருடைய மாதிரியில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன்று மீளவும் மாதிரி பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

நோயாளர் விடுதிகளின் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts