இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்க ஏற்பாடு

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 490 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டு மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கான நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட உளவள இணைப்பாளர் கு.கௌதமன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கினார்.

வடமாகாணத்தில் 38 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகிய நிலையில் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்நிலையில், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி கல்விச் செயற்பாடுகளை மாணவர்களுக்கு புகட்ட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

Related Posts