முதன்மைக் குழுவாக அடையாளம் காணப்பட்ட 3 லட்சம் நபர்கள் மூன்று வார காலத்திற்குள் இரண்டு அளவு கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் -19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து 6 லட்சம் டோஸ் தடுப்பூசி கிடைக்கவுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் முதல் கட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவார்கள்.
உலக சுகாதார அமைப்பின் கோவக்ஸ் வசதியின் கீழ் இலங்கை கோவிட்-19 தடுப்பூசிகள் கிடைக்கும்.
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து பெறப்படும் கோவிட் -19 தடுப்பூசிகள் பரந்தளவிலான குழுவினருக்கு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன- என்றார்.