மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இரண்டாவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார்.
மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 57 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருதய நோயாளியான அவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.