வர்த்தக நிலையங்கள், அங்காடிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளை முன்னெடுக்கும்போது, அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானிக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்று முதல் கண்காணிக்கப்படவுள்ளது.
இதற்காக விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை பேணுதல், கிருமித் தொற்று நீக்கம் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.