வவுனியா நகரில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 54 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா நகரில் பசார் வீதி உள்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று 114 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அங்கு இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் 54 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.