நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை 222.3 கிலோ மீற்றர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.3 ரிச்டெர் என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின், நங்குங்குரு குடியேற்றத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 935.0 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதன் காரணமாக தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.