யாழ். பல்கலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முற்றாக நீக்கம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரை அங்கிருந்து விலக்கியுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார்.பொலிஸ் திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நேற்று மாலை வரை கடமையில் இருந்த பொலிஸாரை அங்கிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி, மேலும் கூறினார்.

Related Posts