சுகாதார வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இது குறித்த அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி பாடசாலைகளை மீண்டும் திறக்கும் செயன்முறை குறித்து அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிறரின் பங்களிப்புடன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோருடன் கலந்துரையாடலை நடத்துமாறு கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல்கள் இன்று (புதன்கிழமை) முதல் 10 வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனவரி 11 ஆம் திகதி, 02 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை தரம் 1 மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் வாரத்தில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் தரம் 11 ற்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts