இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 631 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 28 ஆயிரத்து 682 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 779 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Posts