திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கும் கோரோனா!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் நேற்றுமுன்தினம் பெறப்பட்டு தென்னிலங்கை ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைப்பட்டன.

அவர்களில் 39 வயதுடைய வியாபாரிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் ஆகிய சந்தைகள் வரிசையில் நான்காவது சந்தையாக திருநெல்வேலி சந்தையிலும் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார்.

Related Posts