வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைவு!

வடமாகாண தொற்று நோய்க்கான வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

தற்போது அங்கு, சுமார் 100இற்கு மேற்பட்ட கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இந்நிலையில், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 20 பேருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

Related Posts