இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்றார்.
நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமையில் அமைச்சரவை கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் யோசனைக்கேற்ப இந்த அமைச்சரவை கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அபிவிருத்தி நடவடிக்கைகளை முறையாக செயற்பாட்டு ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் அமைச்சரவை கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து இணைய தொழில்நுட்பம் ஊடாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் குறித்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து மேற்படி அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.