இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 3 இறப்புகள் பதிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு நீரிழிவு நோயுடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கொழும்பு 10ஐச் சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் கொழும்பு 13ஐச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு காரணம் நீரிழிவு நோய் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts