வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் – யாழ்.மாநகர முதல்வர் அறிவிப்பு

வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் மாநகரத்திற்கு வருகை தரும் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பின்பற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நகர மத்தியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
அதனபோதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

“வடக்கு மாகாண ஆளுநருடன் நான் இதுதொடர்பில் கலந்துரையாடினேன். யாழ்ப்பபாணம் மாநகர பகுதியில் தொற்று ஏற்படா வண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுமாறு ஆளுநர் பணித்துள்ளார். அதற்கு அமைய குறித்த நடைமுறை இன்றிலிருந்து பின்பற்றப்படும்” என்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தெரிவித்தார்.

Related Posts