மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரையில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.