நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தல் போன்ற எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் வர்த்தக நிலையங்களுக்கு சென்று அதிகளவான பொருட் கொள்வனவில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மீண்டும் தொற்றாளர்கள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.