மருதங்கேணி கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் 21 பேர் அனுமதி!!

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு 21 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடயைச் சேர்ந்தவர்கள் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை நேற்று கண்டறியப்பட்டது.

அவர்கள் 21 பேரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டனர்.

கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு பொது மருத்துவ வல்லுநர் உள்பட 4 மருத்துவர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு 4 தாதிய உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்களும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மருத்துவக் குழு ஒரு வாரம் தொடர்ச்சியாக கடமையாற்றிய பின்னர் மற்றொரு மருத்துவக் குழுவை மாற்றம் செய்யும் சுழற்சிமுறைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மருதங்கேணி கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் 50 பேருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

Related Posts