தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி சேவையில் ஈடுபட்டுவரும் சாரதி!

அண்மையில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்கு வரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொண்ட பேருந்தின் சாரதியை தனிமைப்படுத்துமாறு சுகாதாரத்திணைக்களத்தினால் வவுனியா சாலைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சாரதியை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்தாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கண்டி பேருந்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினால் விடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சட்ட அறிவுறுத்தல்களையும் மீறி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .

அவர்கள் மேலும் தெரிவிக்கும்போது ,

இ.போ.ச பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை கண்டறிந்த சுகாதார தினைக்களம் வவுனியா சாலை முகாமையாளருக்கு குறித்த கண்டி யாழ்ப்பாண இ.போச , பேருந்து சாரதியை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. எனினும் இவ் அறிவுறுத்தல்களை புறம் தள்ளிவிட்டு நேற்று குறித்த பேருந்து சாரதியை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை சாலை முகாமையாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இவ்வாறு சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை உதாசீனப்படுத்தி சேவையில் ஈடுபட்டு வருகின்றமையினால் ஏனைய சாரதிகள் நடத்துனர்களும் சாலையில் பணியாற்றும் ஊழியர்களும் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் குறித்த சாரதிக்கு பி.சி.ஆர் மருத்துவப்பரிசீலனை மேற்கொண்டு திரும்பவும் சேவையில் ஈடுபடுத்துமாறு மேலும் தெரிவித்துள்ளனர் .

Related Posts