வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார். இவ் வைத்தியசாலையின் காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் பி.திருமாறன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு கோரி வைத்தியர்கள் கடந்த 4 நாட்களாக காலை ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அரச வைத்திய சங்கத்தின் தாய் சங்க தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பினை நிறைவு செய்ய தீர்மானித்ததாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய சங்க தலைவர் மேலும் கூறினார்.

Related Posts