முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் சிலாபத்துறை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது.
கொக்கிளாய் நோக்கி பயணித்த உழவு இயந்திரமொன்று, வீதி போக்குவரத்து கடமையிலிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
கம்பளையைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் குறித்த உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.