நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேரும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 36 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக உயர்வடைந்துள்ளது.